அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவிற்கும் 20 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையில் இந்த கட்டண சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாகும்புரயில் இருந்து காலி வரையான கட்டணம் 420 ரூபாவில் இருந்து 410 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மாகும்புரயில் இருந்து மாத்தறை வரையான கட்டணம் 530 ரூபாவில் இருந்து 520 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மாத்தறை வரையான கட்டணம் 580 ரூபாவில் இருந்து 570 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடவத்தையில் இருந்து காலி வரையான கட்டணம் 470 ரூபாவாகவும் கடத்தையில் இருந்து மாத்தறை வரையான கட்டணம் 570 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடுவலையில் இருந்து மாத்தறை வரையான கட்டணம் 570 ரூபாவில் இருந்து 550 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.