ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அமைதி காலப்பகுதியில் தேர்தல் விதிகளை மீறிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.நேற்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் ஆணைக்குழுவின் தேசிய முறைப்பாட்டு மத்திய நிலைய நிலையத்திற்கு 84 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3905 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவற்றில் 3771 தேர்தல் விதி மீறல் சம்பவங்களும், 27 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சம்பவங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது