பலாலி முதல் பளை வரையான வீதியில் போடபட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இராணுவத்தால் நேற்று (15) இந்த வீதி தடைகள் போடப்பட்டிருந்தன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இவ்வாறு இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது என பொலிஸார் இராணுவத்தை தெளிவுப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைவாக இராணுவத்தால் குறித்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.