இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வேறு சில குற்றங்கள் தொடர்பில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.