நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

6,924,255 (52.25%) வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளராக சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றிருந்தார்.

அதனடிப்படையில் 1,360,016 வித்தியசாயத்தில் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.