தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்படப்பட்டிருந்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பதாக புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் செயலக கட்டிடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரமும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தாம் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக புதிய ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

இதேபோன்று தம்மால் வழங்கப்பட்ட கொள்கை பிரகடனத்தில் உள்ளடங்கியிருந்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு உறுதி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் இன்று கேட்டுக்கொண்ட வகையில் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும். இதேபோன்று அனைவரதும் ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சேவை புரிவதற்கு தாம் அர்ப்பணித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)