புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (19) காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கபடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.