ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சீன – இலங்கை இடையிலான உறவில் புதிய பரிணாமம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக சீன ஜனாதிபதி சீஜின் பின்ங் தெரிவித்துள்ளார்.இரு நாட்டு மக்களும் மேலும் இலாபம் ஈட்டும் வகையில் குறித்த உறவுகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி எனவும் தான் உட்பட தன்னுடைய நாட்டு மக்கள் மனதார வாழ்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.