ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது.இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபேராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)