கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க சர்வதே விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் நிலவிய சீரற்ற வானியையை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே – 652 ரக விமானம் நேற்று (18) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக வந்துள்ளது.

அந்த சந்தர்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அந்த விமானத்தை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்க விமானநிலைய அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இதற்கமைய நேற்று மாலை சுமார் 6.56 மணி அளவில் குறித்த விமானம் மத்தல சர்தேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அந்த சந்தர்பத்தில் மத்தல விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் சீரான வானிலை நிலவியுள்ளது.

கடந்த 7 வருடங்களின் பின்னரே எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இது போயிங் 777 ரக விமானம் என்பதோடு, அதில் 76 பயணிகளும், 16 விமான பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

எனினும் விமானத்தை அங்கு தரையிறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் எஞ்சினில் பறவைகள் சில சிக்கியதாக விமானியால் மத்தல விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வை – 12 விமானம் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை சீர்செய்யப்பட்டதுடன் குறித்த எமிரேட்ஸ் விமானம் நேற்று இரவு 10.37 அளவில் தரையிறங்கியுள்ளது.

எனினும் பின்னர் அந்த விமானத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் விமானத்தின் எஞ்சினை பரிசோத்தமைக்கு அமைய விமானத்தின் எஞ்சினில் அவ்வாறு பறவைகள் அகப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டு இரவு 11.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த விமானம் இரவு 11.40 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழலுள்ள பகுதியில் சீரான வானிலை நிலவியதாகவும் அதனால் ஏனைய விமான சேவைகள் வழமை போன்று இடம்பெற்றதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.