ஓய்வூப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்த இன்று (20) பாதுகாப்புச் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இன்று காலை 9.15 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நியமித்தார்.

அவர் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி 2 வது லெப்டினனனாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார்.

இராணுவத்தில் பல பதவிகளை வகித்துள்ள அவர் இறுதிப் போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார்.

2016 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பிரேசிலுக்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றினார்.