இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கள், நேற்று (19) இரவு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.அலரி மாளிகையில் இடம்​பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.