இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அடுத்த மாதம் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்திலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.