முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவின் பூதவுடல் இன்று (20) அவருடைய கம்பளையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அவர் நேற்று தனது 88 ஆவது வயதில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலம் சென்றார்.

இவர் இலங்கையின் 14 ஆவது பிரதமராக 2010 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடத்தவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.