சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு தெரிவித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை சபாநாயகர் ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.