இலங்கைக்கான அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது புதிய ஜனாதிபதிக்கு தூதுவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ, அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் அன்ரனி ரென்சுலி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா மற்றும் பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.