கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

அவர் கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று அமைச்சின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இதேவேளை, நீதிமன்றம் மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பிற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.