இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன நேற்றுக் காலை ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இராணுவ அதிகாரிகளுடன் அலுவலகத்துக்கு வருகை தந்த பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் பௌத்த மகா சங்க தேரர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டதுடன் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கினையும் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ‘செத் பிரித்’ மத வழிபாட்டின் பின்னர் மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.