மூன்று நாள்கள் தொடர்ச்சியாக காய்ந்த காய்ச்சல் காரணமாக சோர்வுற்று இருந்த குடும்பஸ்தர் கதிரையில், நேற்று முன்தினம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாவற்துறை தெற்கைச் சேர்ந்த நாகரத்தினம் ராஜேந்திரன் வயது (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி மேற்படி நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 21ஆம் திகதி இரவு வீட்டில் கதிரையில் இருந்தவர், திடிரென மயங்கி வீழ்ந்துள்ளார்.உறவினர்கள் அவரை அழைத்து சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் கூறியுள்ளார்.