மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய சுழல் காற்று காரணமாக, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக, கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி, சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பர் உயிரிழந்துள்ளார்.கடைத் தொகுதியை பராமரிக்கும் குறித்த நபருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நபர் மீது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தமையாலேயே அவர் உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.