Header image alt text

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் மேற்படி நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஜனாதிபதியினால் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்கள் தொடர்ச்சியாக காய்ந்த காய்ச்சல் காரணமாக சோர்வுற்று இருந்த குடும்பஸ்தர் கதிரையில், நேற்று முன்தினம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாவற்துறை தெற்கைச் சேர்ந்த நாகரத்தினம் ராஜேந்திரன் வயது (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி மேற்படி நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 21ஆம் திகதி இரவு வீட்டில் கதிரையில் இருந்தவர், திடிரென மயங்கி வீழ்ந்துள்ளார். Read more

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 35 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு டெங்கு நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகள் பெருகும் நிலையில் சூழல்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், பொது மக்களிடம் மாவட்ட சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர். Read more