மட்டக்களப்பு மாவட்டத்தில், இம்மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 91 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென வைத்தியர் கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் இருந்து இதுவரை, 1,419 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில், இருவர் உயிரிழந்துள்ளர் என்றும் அவர் தெரிவித்தார். இதில் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மரணமும் ஏறாவூர் பகுதியில் ஒரு மரணமும் என இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக, வைத்தியர் கலாநிதி வே.குணராஐசேகரம் தெரிவித்தார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 34 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதுபோல் செங்கலடியில் 18 பேர், ஆரையம்பதியில் 10 பேர், வெல்லாவெளியில் 06 பேர், வாழைச்சேனை, வவுனதீவுயில் தலா 05 பேர் என, மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.