டெலோ அமைப்பினால் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றிரவு நடைபெற்ற டெலோ அமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். டெலோ அமைப்பின் செயலாளர் ஸ்ரீகாந்தா, யாழ்.மாவட்ட செயலாளர் சில்வஸ்டார் மற்றும் யாழ்.துணை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் ஆகிய மூவருக்கு எதிராகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டமை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு எதிராக விசாரணையின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எம்.கே.சிவாஜிலிங்கம் என்பவரை ஒரு பொதுவேட்பாளராக ஏற்றுக் கொண்டோமென கூறி,

அவரை ஆதரிக்கும் படி பிரசாரம் செய்தமை கட்சியினுடைய ஒழுக்க விதிகளுக்கு முரணானது என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீகாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் குழு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.