நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணையகத்துக்கு குறைந்தது 2 மாதங்கள் தேவை.ஈஃp,ஈp,அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்த முடியும் என்று ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல்கள் ஆணையகத்தை பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவை எதிர்வரும் டிசம்பர் 31க்குள் நிறைவு செய்ய முடியும். இந்நிலையில் 2020 ஜனவரி ஆரம்பத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.நடைமுறை நாடாளுமன்றம் 2020 மார்ச் 1ஆம் திகதியின் பின்னரே நான்கரை வருடங்களை பூர்த்தி செய்து கலைப்பதற்கான தகுதியை பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.