முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் வேன் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவரா அறிவிததுள்ளார்இச்சம்பவம் இன்று (24) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நாள் என்ற காரணத்தினால் உடையார் கட்டுப்பகுதியில் மதுஅருந்திவிட்டு மதுபோதையில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த அதிநவீன வேன் ஒன்று காளிகோவிலடிப் பகுதியில் பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மோதித்தள்ளிவிட்டு தப்பிசென்றுள்ளது.

இதன்போது உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தப்பிசென்ற வேன் வள்ளிபுனம் இனிவாழ்வு இல்லத்திற்கு முன்னால் இளைஞர்களால் மடக்கப்பட்டுள்ளது.

கிராம இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி வேனினை சூழ்ந்துகொண்டதன் காரணத்தினால் சம்வபம் தொடர்பில் அறித்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தினை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க முற்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

இருந்தும் வாகனத்தினையும் அதில் பயணித்தவர்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்துசென்றுள்ளார்கள்.

விபத்தில் வள்ளிபுனம் 17 ஆம் கட்டையினை சேர்ந்த 19 வயதுடைய சந்திரன் ஜீவகுமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.