பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக, வீதி விபத்துகளைத் தடுக்கும் முகமாக, பாதசாரிகளுக்கும் சாரதிகளுக்கும், வீதி ஒழுங்குமுறை தொடர்பில் விழிப்பூட்டும் விசேட நடவடிக்கையொன்று, வவுனியா போக்குவரத்து பொலிஸாரால், வவுனியா நகரில், இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பரிசோதகர் அசோக்க, உப பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க, மக்கள் தொடர்பாடல் பொலிஸ் சார்ஜன்ட் பிரேமதிலக ஆகியோர், போக்குவரத்துப் பொலிஸாருடனும் சமுதாய பொலிஸ் குழுவுடனும் இணைந்து, இந்த விழிப்பூட்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, பாதசாரிகள், சாரதிகள் ஆகியோரை மறித்து, வீதி ஒழுங்குமுறை தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.

நேற்று மாத்திரம், 150 சாரதிகளுக்கும் 350 பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வூட்டப்பட்டது.

ஒரு வார காலத்துக்குகு இந்த விழிப்பூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.