தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (25) பிற்பகல் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு முதன் முறையாக இந்த கலந்துரையாடலை நடத்துகின்றது.

தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.