பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) நிதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இன்று காலை 10.15 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 22 ஆம் திகதி நியமித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் அரச அதிகாரிகளின் பாதுகாப்பை பிரேரணை ஒ்னறின் ஊடாக உறுதி செய்வதாக தெரிவித்துள்ளார்.