இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் சுமுகமான கலந்துரையாடிலிலும் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் டொம் பேர்னும் (Tom Burn) கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.