இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சிலர் இன்று (25) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் உள்ள பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அத்துடன் மஹாவலி, கமத் தொழில், நீர்பாசனம், கிராமிய அபிவிருத்தி மற்றும் உள்ளக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று வெளிநாட்டு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.