முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின், பிணை மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சில விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக குறித்த மனுவை நாளை (27) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில். கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நாளை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.