நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டு வருவது தொடர்பில் எந்தவித தீர்மானம் மற்றும் அறிவிப்பு விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற பொதுச்செயலாளர்  செயலாளர் நாயகம் தம்மிக்க தஷநாயக்க, அரசாங்க செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றம் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி கூடவிருப்பதாகவும், உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தொடர்பான பெயர் பட்டியல் கிடைத்த பின்னர் அதற்கேற்ப ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.