யாழ்தேவி ரயில் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில் தடம்புரண்டுள்ளது. தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை சீராக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.