இந்தியாவின் பிரபல விஸ்தாரா எயார் லயன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த முழு சேவைகளை காவிச் செல்லும், டாடா சகோதரர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியுடன் விஸ்தாரா நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. மும்பை மற்றும் கொழும்புக்கு இடையே தினமும் புதன்கிழமைகளைத் தவிர்ந்த நாட்களில் இந்த விமான சேவைகள் இடம்பெறும். இதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணத்தின்போது பிரீமியம் எகனாமி வகுப்புத் தேர்வை முதலில் வழங்குவதோடு பொருளாதார மற்றும் வணிக வகுப்புக்களையும் மேலதிகமாக சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 25 ஆம் திகதி இலங்கைக்கான முதல் பயணத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விஸ்தாரா விமானத்தில் வருகை தந்த அதிகாரிகளுக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த புதிய விமான சேவை தொடர்பில் கருத்து வெளியிட்ட விஸ்தாராவின் தலைமை வியூக அதிகாரி வினோத் கண்ணன், ‘சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான மகத்தான ஆற்றலைக் கொண்ட நாடான இலங்கைக்குள் விமானங்களுடன் மற்றுமொரு புதிய புவியியல் ரீதியாக நுழைவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புக்கள் மற்றும் நியாயமான சேவைகளை வழங்குவதன் மூலம் உலகெங்கிலும் ஒரு அடையாளத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள இந்தியாவின் ஐந்து நட்சத்திர விமான சேவைகளை மட்டுமே நாங்கள் அறிமுகம்படுத்துகிறோம்.

விஸ்தாரா விமான சேவையின் ஊடாக பயணம் செய்யும் பயணிகள் புதிய உணர்வையும் ஒப்பிடமுடியாத விருந்தோம்பலையும் அனுபவிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.