ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த பிரிவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. விசாரணைகளின் பின்னர் முறைபாடுகளை பதிவு செய்தவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.