முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பசில் ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் சிகிச்சைகளுக்காக டிசம்பர் 5 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்லவிருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பசில் ராஜபக்ஷவிற்கு குறித்த காலப்பகுதியில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.