ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அரசாங்கத்தால் நடத்தப்படும் புதிய பாதுகாப்பு மற்றும் நகர அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைய கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் யாசகம் பெறுபவர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் இதற்கான ஆலோசனைகளும் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கில் யாசகம் பெறுவோர் உள்ளனர்.இவர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அழகுபடுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்துவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி யாசகம் பெறுவோரை கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேற்றி ரிதியகம தடுப்பு நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.