சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பொருளாதார மேம்பாட்டை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.