ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினரை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்திய இராஜாங்க போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வி.கே.சிங்க் வரவேற்றிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.