அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றது. இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் 17,000 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதேவேளை அடுத்த வருடத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை இதுவரை வழங்கப்படவில்லை.

அதற்கான வவுச்சர்களை வழங்கும் செயற்பாடு எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி இடம்பெறும் என கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை பாடசாலைகளில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று விசேட சிரமதான பணிகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.