யாழ்தேவி தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தொடரூந்து போக்குவரத்து இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டாளர் வஜிர பொல்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் காலை மீண்டும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தொடரூந்து சேவை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், நேற்று முன்தினம், அம்பனபொல – கல்கமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டது.

இதனால், கொழும்பிலிருந்து மஹாவ வரையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வரையில், ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.