ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்த கனடா நாட்டவர் ஒருவர் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரராஜா என்ற 82 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த கனடா நாட்டவர் சிலாபம் பிரதேசத்தில் வசித்து வரும் தனது உறவினர்களை சந்தித்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போதுவென்னப்புவ – மிரிஸ்ஸன்கொடுவ பிரதேசத்தில் ரயில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.