2020ம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.