அம்பாறை அக்கரைப்பற்று கண்ணகிபுரம் மலையடிவாரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சின்னப்பனங்காடு, புளியம்பத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான விநாயகமூர்த்தி தேவரூபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக அவர் காணாமற்போயிருந்த நிலையில், இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளாரென கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.