இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான சேவை சங்கத்துடன் கலந்துரையாடி இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.