புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர். சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராகவும், உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.