வவுணதீவில் பயங்கரவாதிகளால் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று இரத்ததான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்றுகாலை 8 மணியளவில் காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இந்த இரத்ததான நிகழ்வு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பமானது. கடந்த வருடம் இதே தினத்தில் வவுணதீவு சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸார் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் தலைமையிலானக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.