ஏழாவது ´வன மித்ரா சக்தி போர் பயிற்சி´ நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகள் இந்தியாவின் புனேவில் உள்ள குமாவோன் இராணுவ முகாமில் ஆரம்பமாகவுள்ளது. இதன்மூலம் இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்புகளை பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்பதற்காக இலங்கை இராணுவத்தின் கெமுனு படையணியை சேர்ந்த 120 இராணுவ வீரர்கள் நேற்று இந்தியா சென்றுள்ளனர்.

இராணுவ ஒத்துழைப்பு, கூட்டு தந்திரோபாயம் மற்றும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குத் தயாராவதற்கு போதுமான அறிவைப் பெறுவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இந்த போர் பயிற்சி முகாமில் முக்கியதுவம் பெறுகின்றன.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ அனுபவங்களும் இந்த பயிற்சியின்போது பகிரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் 2012ஆம் ஆண்டு முதல் மூன்று சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.