Header image alt text

சீனாவின் சிறப்பு பிரதிநிதிகளையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய வலயத்திற்கான ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் ஜியான் ஹூ அவர்களையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற மேற்படி சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பகுதியில் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனார். கைதானவர்கள் 16, 19 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தமிழகத்தின் இரு இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு, விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹசீமுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது. Read more

சிறுமி ஒருவரை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது,

கோண்டாவில் இரும்பக உரிமையாளர் கொலை உள்ளிட்ட கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்பதனை கண்டறிந்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி 14 வயது சிறுமியொருவர் தனது வீட்டிற்கு சற்று தொலைவில் தனது நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர். Read more

நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். Read more

நுவரெலியா – வலப்பனை – மலப்பத்தாவையில் நேற்றிரவு வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போயிருந்த நான்கு பேரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனனர்.

குறித்த மண்சரிவில் சிக்குண்டுள்ள மற்றுமொருவரை தேடும் பணியை இராணுவத்தினர் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று முற்பகல் இலங்கை வரவுள்ள அவர் இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர், கடந்த 29 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். Read more

இந்தியாவுக்கு தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 196 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 ஆம் திகதி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். Read more

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 643 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 297 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு, காஞ்சூரம்குடா, வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிகுண்டு பிரிவினரால் நேற்று (30) மீட்டு அப்பகுதியில் வெடிக்க வைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குறித்த பகுதியில் வயல் பகுதிக்கு அருகில் மண்மேடு ஒன்றில் மண் அகழப்பட்ட நிலையில் உள்ள பகுதியில் கைக் குண்டுகள் இருந்துள்ளதை கண்டு அங்கு விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயிகள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். Read more