இந்தியாவுக்கு தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 196 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 ஆம் திகதி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.தமது இந்திய விஜயத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த ஆகியோர் உட்பட இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பல்வேறு மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.